காதலியுடன் கரம்கோர்த்த பிக்பாஸ் டானியல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய டானியல் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது டானியல் காதலியான டெனிஷா வந்தார். அப்போது டானி தன் காதலியை கட்டி தழுவி முத்தமிட்ட காட்சிகள் அவர் எந்த அளவு காதலிக்கிறார் என்பது நமக்கு தெரிந்தது.

தற்போது வெளியேறிய டானி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பதிவுத் திருமணம் செய்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அவரின் பதிவில், ‘உங்கள் அனைவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி. இதுதான் என் அழகு தேவதை குட்டு. என் மனைவி. நாங்கள் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். குடும்பச் சிக்கலால் இத்தனை நாள் எங்களின் காதல்குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன். இன்று முதல் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக எங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் போகிறோம். உங்களில் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு வேண்டும். இனி, நான் பேச்சிலர் கிடையாது’ என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.