உலகின் எடை குறைந்த முதல் A/C ஹெல்மெட்டுகள் அறிமுகம்..! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!! உடனே முன்பதிவு செய்யுங்க ..!!

உலகின் எடை குறைந்த முதல் A/C ஹெல்மெட்டுகளாக, ஃபெஹெர் ACH-1 வகை ஹெல்மெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை ஹெல்மெட்டுகளில் தலையின் பின்புறப்பகுதியில் மிகச்சிறிய A/C பொருத்தப்பட்டுள்ளது.

அரசு வரையறுத்துள்ள நிபந்தனைகளுக்கேற்ப இந்த ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டுகள் குறைந்த எடை கொண்டவை.

இந்த வகை ஹெல்மெட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள A/C மெஷினை, மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரி மூலமாகவே சார்ஜ் செய்து கொள்ளும் முடியும்.

ஹெல்மெட்டின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஃபெஹெர் டியூப்ளர் ஸ்பேசர் ஃபேப்ரிக்கானது ஹெல்மெட்டின் உட்புறத்தில் குளிர்காற்று இதமாகப் பரவி ஹெல்மெட்டின் உள்ளே மூச்சடைக்கும் விதமாக இல்லாமல் வாகன ஓட்டிகளை ரிலாக்ஸாக உணரச் செய்யத்தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெல்மெட்டுகளின் உட்புற வெப்பநிலை 15 டிகிரிக்கும் குறைவாக இருக்குமாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் எடை 1,450 கிராம் மட்டுமே. ஹெல்மெட்டின் ஓட்டுப்பகுதி ஃபைபர் மேட்டால் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் எடை குறைவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகை ஹெல்மெட்டுக்களுக்கு ECE மற்றும் DOT தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஃபெஹெர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே இத்தகைய ஹெல்மெட்டுகளை முன்பதிவு செய்து பெற முடியும்.

இந்திய மதிப்பில் இவற்றின் அடக்க விலை 38,600 ரூபாய் ஆகும்.