சென்றாயன், பாலாஜியிடையே மோதல்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாலாஜி சென்றாயன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

விஜயலக்ஷ்மி அந்த பால் எடுத்தது தப்பு தானே என கேட்க, சென்றாயன் இல்லை என கூறுகிறார். அதன் பின்னர் ஜனனி எப்படி ஊதி பெருசாக்குறாரு பாரு என கூறுகிறார்.

அதன் பின்னர் பாலாஜி சென்றாயன் இடையே கருத்து மோதல் ஏற்பட பாலாஜி நான் வேற எதாவது சொல்லிடுவேன் என கூற சென்றாயன் கோபமாக நானும் அதை தான் சொல்கிறேன் என கூறுகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.