அங்கர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மிகப் பிரமாண்டமான மாணவர்களுக்கான போட்டிக்களம்!

இலங்கையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் எங்கர் நிறுவன அனுசரணையில் மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும் போட்டிக்களத்தின் ஆரம்பக்கட்ட நிகழ்வுக்கான ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுக்காலை 11.45 மணியளவில் யாழ்ப்பாணம் யு.எஸ்.ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக எங்கர் நிறுவனத்தின் ஊடக முகாமையாளர் திரு.எஸ்.பத்மபிரியன், மாகாண பணிப்பாளர் திரு.எஸ்.உதயகுமார், தினக்குரல் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கேசவராஜா, ஐங்கரன் மீடியா முகாமைத்துவ பணிப்பாளர் திரு.என்.கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதில் அரசாங்க மற்றும் தனியார் துறை ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை இந்த போட்டிக்களம் இடம்பெறவுள்ளது.இந்த பிரம்மாண்டமான போட்டி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற எங்கர் நிறுவனத்தின் தலைமையில் இடம்பெறவுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை உள்ளிடக்கியே இந்த மாபெரும் போட்டிக்களம் இடம்பெறவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.