குடி, தூக்கமின்மை, மனநோய்… தமிழகம் முதலிடம்! : அன்புமணி

குடிப்பழக்கம் ,மனநோய்,தூக்கமின்னமை போன்ற பிரச்சனைகளில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்வதாக முன்னாள் சுகாதார அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலோ கல்லூரி வீஷ்யூவல் கம்யூணிகேசன் துறை சார்பில் நித்ரா G S T (get sleep tonight) என்னும் பெயரிடபட்ட தூக்கமின்மை குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவில் அன்புமணி ராமதாஸ், கல்லூரி துணை முதல்வர் பாத்திமா போராசிரியை நித்யா , பசுமை தாயகம் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ், ”இந்தியாவில் தற்போது மது அருந்தும் பழக்கம் ஆரம்பிப்பது 40 வயதிலிருந்து 13 மூன்றாக குறைந்து உள்ளது. இவ்வாறு 13 வயதிலிருந்து குடிப் பழக்கம் இருப்பவருக்கு 26 வயதில் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து விடும். உலகில் குடிக்கும் பழக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது,

தமிழகத்தில் மட்டும் குடிப்பழக்கத்தினால் 2 லட்சம் பேர் இறந்துள்ளதாக பிரபல லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. தூக்கமின்னமைக்கு மதுப்பழக்கத்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய காரணம் மொபைல் போன்கள் தான் அவற்றை போதுமான அளவிற்கு கையாளவேண்டும்.

தூக்கமின்மை என்பது இளம் வயதில் மிகபெரிய பிரச்சினையாக தெரியாது, ஆனால் வயதான காலத்தில் அதன் பிரச்சினை பெரிய அளவில் தெரிய வரும், மாணவர்களுக்கு விளையாட்டு என்பது மிக முக்கியம். அதை தவறாது பழக்கத்தில் கொள்ள வேண்டும்” என உரையாற்றினார் .

விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ், ”மதுவால் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் இந்தியாவில் இறக்கின்றனர் இதில்தமிழக்தில் மட்டும் இறக்கிறார்கள். தமிழகத்துக்கு சுமார் 31 ஆயிரம் கோடி மதுவால் வருமானம் வருகிறது, இந்த வருமானம் தமிழ்நாட்டில் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு என்பது வேதனைகுரியவிஷயமாகும்.

இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான், எங்கள் இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு மது கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெறுகிறோம். ஆனால் தமிழக அரசு மூறையீடு செய்து திரும்ப அந்த மதுக்கடைகளை திறக்கிறது.

ஆட்சிக்கு வரும் போது மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்ற தமிழக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை” என தெரிவித்துள்ளார்.