பிரம்மாண்டமான மருத்துவமனையில் பரிதவிக்கும் நோயாளிகள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மிகப்பெரிய அளவில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதிய அளவிற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை. இதனால் நோயாளிகள் அங்கு பெரும் சிரமப்பட்டு வரும் சூழ்நிலை உள்ளது.

ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முறையாக நடந்து கொள்ளாததால் அவர்கள் தனியார் மருத்துவமனையை தேடிச் செல்கின்றனர். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை தேடி சென்றால் அவர்கள் வெகு நேரம் வரிசையில் நிற்க வைக்கிறார்கள் காரணம் கேட்டால் ஊழியர்கள் சிலர் தான் இருக்கின்றோம் நாங்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது என பதில் அளிக்கிறார்கள்.

அரசாங்கம் மிகப்பெரிய அளவில் செலவிட்டு கட்டிடத்தை கட்டி, மருத்துவமனையை திறந்து உள்ளது ஆனால் அங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏதாவது நோய்கள் ஏற்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனையை தேடுகின்றனர் காரணம் அங்கு போதுமான ஊழியர்கள் இல்லாததே எனக் கூறுகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள் கூறுகையில், இவ்வளவு பெரிய மருத்துவமனையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.