தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை அடா சர்மா. சமூக வலைத்தளங்களில் அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பு எற்படுத்துபவர். அவர் அடுத்து பாலிவுட்டில் கமாண்டோ 3, தமிழில் சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் நடிக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்காக அவரின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்துள்ளது.
அதில் அவர் காய்கறி கடை வைத்திருக்கும் பெண் போல உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.