நெஞ்சை உருகவைக்கும் புகைப்படங்கள்.! கண்ணீருடன் வைரலாகும் ஒரு பாச போராட்டம்.!! யார் இந்த பாட்டி.?! யார் இந்த பள்ளி மாணவி.?

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு பாட்டியும், பள்ளி சீருடையில் ஒரு மாணவி ஒருவரும் கண்ணீருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. யார் இந்த பாட்டி.., யார் இந்த பள்ளி மாணவி.., இவ்வளவு வேகமாக இவர்களின் புகைப்படங்கள் வைரலாக ஏன் பரவுகிறது.

குஜராத் மாநிலத்தில் ”பக்தி” என்ற ஒரு பள்ளி மாணவி கடந்த 2007 ஆம் ஆண்டு பள்ளியின் மூலம் சுற்றுலா சென்றுள்ளார். இந்த சுற்றுலாவின் நோக்கம் முதியவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பழக வேண்டும், அவர்களுக்கு எப்படியெல்லாம் மரியாதை செலுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, பள்ளி மாணவி ‘பக்தி’யின் பாட்டி தமயந்தி திடீரென ஒருநாள் காணவில்லை. பாட்டி மீது மிகுந்த பாசம் கொண்ட மாணவி, திடீரென தன பாட்டி காணாமல் போனதால் மிகுந்த சோகத்துக்கு ஆளாகினர். பாட்டி எங்கு சென்றார் என்று தன் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் மாணவி கேட்ட போது, அவர்கள் அனைவரும் ”பாட்டி தூரத்தில் ஒரு உறவினர் வீட்டில் இருக்கிறார். இனி அவர் வர மாட்டார்” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாணவி சுற்றுலா சென்றபோது ஒரு முதியோர் இல்லத்தில் தனது பாட்டி போல் ஒருவர் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பாட்டியாக இருக்குமோ என்று நெருங்கி சென்று பார்த்த மாணவிக்கு வார்த்தை வரவில்லை. ஆம் அது அவருடைய பாட்டியே தான். ஒரு நொடி பள்ளி மாணவியும், அவரின் பாட்டியும் அடையாளம் கண்டுகொண்டு பேச்சில்லாமல் வாயடைத்து நின்றனர்.

இருவரின் கண்களும் கலங்கியது, இவர்கள் கண்ணீரை பார்த்து முதியோர் இல்லத்தில் இருந்த மற்றவர்களும், மாணவியின் தோழியர்களும் கண்ணீர் விட ஆரம்பித்தனர். ஒருவழியாக பாசப்போராட்டம் முடிந்த பின், தன் பாட்டியை பார்த்து மாணவி, ”பாட்டி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்களை யார் கொண்டு வந்து இங்கு விட்டது. உங்களை எங்கெல்லாம் நான் தேடினேன் தெரியுமா.,?” என்று கேட்கிறார்.

அதற்கு பாட்டி தமயந்தி, ”என்னை உறவினர்கள்தான் இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டனர்”. என்று கூறிய படியே சிறுபிள்ளை போல் அழத் தொடங்கினார். அடுத்த நொடி தன் பாட்டியை தன்னுடன் அழைத்து சென்ற மாணவி, ”எப்படி என் பாட்டியை நீங்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம். அவர் என்னுடன் தான் இருப்பார்” என்று பெற்றோர்களுடன் சண்டையிடுகிறார்.

தற்போது, இந்த பாசப்போராட்டத்தை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, இவர்களை நேரில் சந்தித்து பேட்டி கண்டு, 2007 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.