ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் இறுதி கட்ட நெருங்கியிருக்கும் நிலையில் உள்ளது. தற்போது படத்தின் இசைவெளியீட்டு விழா அக்., 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கி வருகின்றனர் படக்குழு.
இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளை முதல் அடுத்த 5 நாளைக்கு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
Get a behind the scenes look at the making of #Sarkar ! From tomorrow, we will be releasing one working still from #Sarkar, every day for the next 5 days. #SarkarWorkingStills pic.twitter.com/jejLpAaMPT
— Sun Pictures (@sunpictures) 25 August 2018
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் இடை வெளியிட்டு விழா வரும் அக் மாதம் 2 ஆம் தேதி நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.







