ஜெர்மனியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், தேங்காய் எண்ணெய் மிக மோசமான உணவு என்றும் அது விஷம் என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் என்பவர் பேசினார்.
ஹார்வர்ட் பேராசிரியரின் கருத்துக்கு தேங்காய் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தும் கேரள மக்கள், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிஎச் சான் பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோயியல் துறையின் இணை பேராசிரியர் கரின் மிஷெல்ஸ். இவர் அண்மையில் ஜெர்மனியில் ஃப்ரைபர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ‘தேங்காய் எண்ணெய்யும் இதர ஊட்டச்சத்து பிரச்சினைகளும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் “தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமானது இல்லை என்று கூறினார்.
மேலும், “தேங்காய் எண்ணெய் பற்றி நான் உடனடியாக உங்களை எச்சரிக்க மட்டும்தான் முடியும். இதை நீங்கள் சாப்பிடுவீர்களானால், இது மிக மோசமான உணவுகளில் ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
அதோடு, தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது. அது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதனால், இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். மாட்டுக்கறியில் இருக்கும் 60 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக தேங்காய் எண்ணெயில் 80 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹார்வர்ட் பேராசிரியரின் இந்த பேச்சால் தேங்காய் எண்ணெயின் விற்பனை சரிந்துள்ளதாக சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். மூன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ஹார்வர்ட் பேராசிரியர் தேங்காய் எண்ணெய்யை பியூர் பாய்சன் என்று ஆராய்ச்சி செய்திருப்பது ஒரு பழைய ஜோக் என்று கிண்டல் செய்துள்ளார்.
அதேபோல, மற்றொரு ஸ்மிதா பருவா என்பவர் குறிப்பிடுகையில், இவர்களில் தேங்காய் எண்ணெய்யை பியூர் விஷம் என்று கூறி மார்க்கெட்டில் அதனுடைய விற்பனையை வீழ்த்துவது. அடுத்து, அதற்கு பதிலாக, சில ஜங்க் உணவுகளை விற்பனை செய்வது, அதற்குப் பிறகு ஜங்க் உணவுகள் விஷம் என்று கூறுவது திரும்பவும் நம்மிடம் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.






