யாழில் மீண்டும் மர்மக் குழு மீண்டும் அட்டகாசம்….!!

கொக்­கு­வில் சம்­பி­யன் லேனில் மருத்­து­வர் ஒரு­வ­ரது வீட்டை, உந்­து­ரு­ளி­யில் முகங்­களை மூடிக்­கட்­டிக் கொண்டு வந்த குழு­வி­னர் தாக்­கி­யுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்த பொருள்­கள், கண்­ணா­டி­கள் அந்­தக் குழு­வி­ன­ரால் உடைக்­கப்­பட்­டுள்­ளது.இந்­தச் சம்­ப­வம் நேற்­று­மாலை இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர் .யாழ்ப்­பா­ணத்­தில் குறித்த சில பொலிஸ் பிரி­வு­க­ளில் இடம்­பெற்ற வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த நிலை­யில் நேற்­று­மாலை கொக்­கு­வி­லில் இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது.

சம்­பி­யன் லேனில் மருத்­து­வர் ஒருவர் வாட­கைக்­குத் தங்­கி­யுள்­ளார். அவ­ரது வீட்­டுக்கு 3 உந்­து­ரு­ளி­யில் வந்த இனந்­தெ­ரி­யாத குழு­வி­னர் தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ள­னர்.

4 பேர் வரை­யில் வீதி­யில் நிற்க இரு­வர் வீட்­டின் உள்ளே சென்று தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக அய­ல­வர்­கள் குறிப்­பிட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்று இரவு பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.