செயற்கை கருத்தரிப்பு மூலம் கணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் அழகான ஆண் குழந்தை பெற்றேடுத்தார்.
மும்பை:
பெங்களூரை சேர்ந்தவர் கவுரவ்(30). இவரது மனைவி சுப்ரியா ஜெயின்(30). இவர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் மார்க்கெட்டிங் ஆலோசகராக பணிபுரிந்தனர். காதலித்து திருமணம் செய்த இவர்கள் 5 வருடம் மகிழ்ச்சிகரமாக குடும்பம் நடத்தினர்.
குழந்தை பிறக்காததால் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றும் பலனில்லை. எனவே செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற விரும்பி மும்பை ஐஸ்லோக் ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சையை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் ஹுப்ளி அருகே நடந்த கார் விபத்தில் கவுரவ் பரிதாபமாக இறந்தார். இதனால் நிலை குலைந்த சுப்ரியா ஜெயின் கணவர் மூலம் குழந்தை பெறும் எண்ணத்தை கைவிடவில்லை.
கணவர் கவுரவ் உயிருடன் இருந்த போது அவரது விந்து சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்து குழந்தை பெற விரும்பினார் இது குறித்து டாக்டர் பிருஷா பரிக்கிடம் ஆலோசனை நடத்தினார்.
அதற்கு சாத்தியம் உள்ளது. என்று கூறிய டாக்டர் பரிக் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். சுப்ரியாவின் கருமுட்டைகளை சேகரித்து செயற்கை கருத்தரிப்பு முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. தோல்வியில் முடிந்தது.
எனவே ஒரு வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுப்ரியாவின் கருமுட்டையும், கவுரவின் விந்தனுவும் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு வாடகை தாயின் கர்ப்ப பையில் வைத்து வளர்க்கப்பட்டது.
10 மாதத்துக்கு பிறகு வாடகை தாய் மூலம் சுப்ரியா அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தால். இந்த அதிசய சம்பவம் விபத்தில் கவுரவ் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
இதனால் சுப்ரியா மிகவம் மகிழ்ச்சி அடைந்தார். டாக்டருக்கு நன்றி தெரிவித்த அவர் எனது கணவர் மூலம் குழந்தை பெற விரும்பினேன். அது தற்போது நடந்துவிட்டது.
எனது மகன் கணவர் முகசாயலில் இருக்கிறான். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என விரும்பினோம். அதன் படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பேன்” என்று அவர் கூறினார்