பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களை நெருங்கி விட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மமதி, ஆனந்த் வைத்திய நாதன், நித்யாம் NSK ரம்யா, ஷாரிக், பொன்னம்பலம் ஆகியோர் வெளியாகியுள்ள நிலையில் இந்த வார வெளியேற்றத்திற்காக ஜனனி, ரித்விகா, டேனியல், சென்றாயன், வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரித்விகா தான் அதிக ஓட்டுகளுடன் Safe ஆகி விட்டார். மேலும் வைஷ்னவி மிக குறைந்த ஓட்டுகளுடன் டேனியல் வைஷ்னவிக்கு அடுத்த இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் குறைவான ஓட்டுகள் பெற்றதால் வைஷ்ணவி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எதுவாக இருந்தாலும் இன்று இரவு உறுதியாக தெரிந்து விடும். அதுமட்டுமில்லாமல் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ Wild Card என்ட்ரி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கலாம்.






