காட்டேரி திரைப்படத்தின் மிரட்டலான Motion Poster வெளியானது!

வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகிவரும் காட்டேரி திரைப்படத்தின் Motion Poster வெளியாகியுள்ளது!

‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம்’ படங்களை அடுத்து டிகே இயக்கும் திரைப்படம் ’காட்டேரி’. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க வைபவ்வரலக்ஷிமி சரத்குமார் ஆகோயோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன்  ஆத்மிக்கா, கப்பல் பட நாயகி சோனம் பாஜ்வா, தெலுங்கு திரையுலக நாயகி மணலி ரத்தோட், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் வாசு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார்.

நேற்றைய தினம் இப்படத்தின் First Look Poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று இப்படத்தின் Motion Poster வெளியாகியுள்ளது!