பெரும் சர்சையை எழுப்பியுள்ள முக.அழகிரி அவர்களின் Video!

இரண்டு தினங்களில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், முக அழகிரி அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருக்கும் வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக வரும் செவ்வாய் அன்று காலை 10 மணியளவில் திமுக செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் நடைப்பெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதால், இந்த கூட்டத்தில், திமுக தலைவர் யார் எனபது போன்ற முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து தற்போது திமுக தலைமை பொருப்பு காலியாகவுள்ள நிலையில் இந்த பொருப்பிற்கு கலைஞர் அவர்களின் மகன்கள் அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரில் யாருக்கு வரும் என குழப்பங்கள் நிலவி வரும் நிலையில்., முக அழகிரி அவர்களை மாஸாக காட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கலைஞர் கருணாநிதி அவர்களின் இடத்தினை அழகிரி அவர்கள் நிரப்ப வருவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

திமுக தொண்டர் இதயநிதி என்பவர் உறுவாக்கியுள்ள இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவினை முக அழகிரி அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டு நாட்களில் கழக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில இந்த வீடியோ திமுக தொண்டர்களிடேயே பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது!