முன்னாள் கணவரை செருப்பிற்கு அடியில் ஒட்டியிருக்கும் பசை போல நடத்திய இளவரசி மெர்க்கல்

அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கல் பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டு இளவரசியானது முதவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவருகிறார்.

குறிப்பாக, மெர்க்கலின் குடும்பத்தினரே அவரை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தந்தையை இதுவரை பார்க்காமல் இருக்கிறார் என்றும் இளவரசி ஆன பின்னர் அனைத்தையும் மறந்துவிட்டார், இவை அனைத்தையும் தனது தாயின் வழிகாட்டுதலில் செய்கிறார் என விமர்சிக்கப்பட்டது.

குறிப்பாக, மெர்க்கலின் சகோதரி சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், மெர்க்கல் ஒரு முட்டாள் என அவ்வப்போது விமர்சித்த வந்த தற்போது, மெர்க்கலின் முதல் கணவர் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.

Trevor Engelson என்ற தயாரிப்பாளை மெர்க்கல் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இவர் தனக்கு அணிவித்த மோதிரத்தை தபால் மூலம் மெர்க்கல் அனுப்பிவைத்துள்ளார். இந்நிலையில், மெர்க்கலை திருமணம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், தன்னை செருப்புக்கு அடியில் ஒட்டியிருக்கு ஒரு பசை போல நடத்தியதாக

Trevor Engelson தன்னிடம் தெரிவித்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்,

மேலும், மெர்க்கலுக்கு தனது முன்னாள் கணவருடன் நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.