வடக்கு டெல்லியில் நாண்ட் நாக்ரி பகுதியில் வசிக்கும் ஷஃப்ருதீன் (29) என்னும் இளைஞர், கடந்த 5 வருடங்களில் புதுடெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 500 உயர்தர சொகுசுகார்களை திருடியுள்ளார்.
இந்நிலையில் இளைஞரின் கைது குறித்து பொலிஸ் துணை கமிஷனர் ராஜேஷ் டியோ கூறுகையில்,
”ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் லேப்டாப், காரின் பாதுகாப்பு சாப்ட்வேர்களை உடைக்கும் உயர் தொழில்நுட்ப கருவிகள், ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றுடன் டெல்லி வரும் ஷஃப்ருதீன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் ஐதராபாத்கு தப்பிவிடும் ஷஃப்ருதீன் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் இருந்துள்ளார்.
கடந்த 3-ம் திகதி, அதிகாரி நீராஜ் செளத்ரி தலைமையில் காருடன் மாட்டிக்கொண்ட ஷஃப்ருதீன் பொலிஸாரிடமிருந்து தப்ப காரை வேகமாக ஓட்டியுள்ளார்.
ஷஃப்ருதீனை விடாது துரத்திய பொலிஸார் சுமார் 50 கி.மீ. தொலைவில் ப்ரகடீ மைடான் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்” எனக் கூறினார்
கடந்த 5 வருடங்களாக உயர்தர சொகுசுகார்களை திருடி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஷஃப்ருதீன் பல முறை பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியுள்ளான்.
ஒரு முறை பொலிஸாரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஷஃப்ருதீன், டெல்லியில் வருடத்திற்கு 100 சொகுசு கார்களை திருடுவதே தனது இலக்கு எனக்கூறியுள்ளான்.







