இன்று இரவு காரில் அழைத்து சென்றால் நாளை தான் விடுவார்கள்! சிறுமியின் குமுறல்

உத்திரபிரதேச காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தியோரியாவில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா திரிபாதி, அவரது கணவர் மோகன் திரிபாதி மற்றும் அவரது மகள் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்நிலையில் இதற்கு அரசிடமிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் காப்பகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இங்கு சில முறைகேடுகள் நடந்து வருவதாக சிபிஐ அளித்த தகவலின் பேரில் அரசும் தனது நிதியுதவி அளிப்பதை நிறுத்திக் கொண்டது.

10 வயது சிறுமி

இந்நிலையில் இந்த காப்பகத்திலிருந்து 10 வயது சிறுமி ஒருவர் தப்பி வந்து போலீஸாரிடம் ஒரு புகாரை அளித்தார். அதில் காப்பகத்தில் உள்ள 40 சிறுமிகள் இருந்தனர். அந்த சிறுமிகள் சிகப்பு, வெள்ளை, கருப்பு நிற கார்களில் இரவு அழைத்து செல்லப்பட்டால் மறுநாள் காலையில்தான் அழைத்து வரப்படுவர் என்று அந்த சிறுமி புகார் அளித்தார்.

கட்டாய வேலை

மேலும் சிறுமிகள் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதாகவும், காலை நேரங்களில் வேலையாட்கள் போல் அவர்கள் நடத்தப்படுவதாகவும் அந்த சிறுமி கூறினார்.

சிறுமிகளின் குமுறல்

காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அந்த காப்பகத்தில் வசித்து வந்தார். அவரை வேலைக்காரி போல் தம்பதியினர் நடத்துவதாக கூறினார். மேலும் இரவு அழைத்து செல்லப்படும் சிறுமிகள் மறுநாள் காலையில் வந்து அழுவதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் அந்த காப்பகத்துக்கு சென்று 24 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும் 15 சிறுமிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். கோரிக்கை இதையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் அரசு எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பீகார் காப்பகத்திலும் இதே நிலைதான் இதேபோல் பீகாரில் காப்பக உரிமையாளர்கள் மற்றும் காப்பகத்துக்கு நிதியுதவி அளிப்பவர்களால் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை தட்டிக் கேட்ட ஒரு சிறுமியை கொன்று காப்பக வளாகத்திலேயே புதைத்ததாக கூறப்படுகிறது.