பாலிவிட்டின் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் தீபிகா. இவரும் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கிசுகிசு வந்தது.
பத்மாவத் பட ரிலீஸீக்கு பின்பு இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காதல் ஜோடிகள் அமெரிக்காவுக்கு ரகசிய சுற்றுலா சென்றள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேக்கப் இல்லாமல் இருவரும் சென்றதால் பல இந்தியர்களுக்கு இவர்களை யாரென்று தெரியவில்லை. இதனால் சுதந்திரமாகச் சுற்றிப் பார்த்துள்ளனர்.
இதற்கிடையே பெண் ரசிகை ஒருவர் தீபிகாவைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் ரன்வீருடன் கையைப் பிடித்துக்கொண்டு செல்வதைக் கண்டதும் ஆச்சரியமாக பார்த்து தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட தீபிகா ரன்விர் கையை விட்டு அப்பெண்ணின் அருகில் வந்துள்ளார்.
இதனை கண்ட பெண் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். ஆனால் வேகமாக வந்த தீபிகா அந்த வீடியோவை மறைத்து அப்பெண்ணை கடுமையாக திட்டியுள்ளார். அவருடன் ரன்வீரும் சேர்ந்து திட்டியுள்ளனார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகை அந்த வீடியோவை வெளியிட்டு அங்கு நடந்ததை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.






