சூரியகாந்திப்பூ செல்பியால் முதலுக்கே மோசம் ஏற்படும் நிலை

கனடாவின் Hamilton பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்று தனது பண்ணையில் வளர்க்கும் சூரியகாந்திப் பூக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள பொது மக்களுக்கு அனுமதியளித்திருந்த நிலையில், மக்களின் நடவடிக்கைகள் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bogle seeds என்னும் நிறுவனம் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.

இதற்காக அந்நிறுவனம் ஒரு பெரிய சூரியகாந்திப் பண்ணையே வைத்திருக்கிறது.

இந்தப் பண்ணையில் சூரியகாந்திப் பூக்களுடன் செல்பி எடுத்துக் கொள்வதற்காக மக்கள் அனுமதிக்கப்படுவதுண்டு.

ஒரு போட்டோவுக்கு 7.50 டொலர்கள் கட்டணம். சூரியகாந்திப் பூவுடன் செல்பி எடுத்துக் கொள்வது சில நாடுகளில் அதிஷ்டமாக கருதப்படுவதால், நியூயார்க் மற்றும் துபாயிலிருந்து கூட மக்கள் வரத் தொடங்கினர்.

Looking back at my past like ?

A post shared by A l e x i s? (@alx.sg) on


இன்று வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் செல்பி எடுப்பதற்காக குவிந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் பலர் கட்டணம் செலுத்தாமல் பண்ணைக்குள் நுழையத் தொடங்கினர், சிலர் பூக்களைக் கொய்தனர், சிலர் இலைகளை உடைத்தனர். இதனால முதலுக்கே மோசம் ஏற்படும் ஒரு நிலை உருவாயிற்று.


இலைகள் உடைந்தால் அதன் வழியாக சூரியகாந்திச் செடிக்கு மிக எளிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.

பொலிசாரின் உதவியோடு மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டதோடு பண்ணையில் பார்வையாளர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது.

இனி Bogle seeds பணையில் செல்பிக்கு அனுமதியளிப்பதில்லை என்று அந்நிறுவனம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.