பேருந்தில் தினமும் ஏறி அமர்ந்து பயணிக்கும் அதிசய நாய்……!! எங்கு தெரியுமா….?

தென் அமெரிக்க நாடான சிலியில் நாய் ஒன்று பேருந்தில் ஏறிப் பயணம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தெருவில் சுற்றித் திரியும் ஆதரவற்ற நாய் ஒன்று சான்டியாகோவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு நபருக்கு பின் ஏறியது. ஓட்டுநர், அந்த நபரின் உடன் வந்த நாய் எனக் கருதிய நிலையில், கடைசி நிறுத்தம் வந்தும் கூட அந்த நாய் இறங்கவில்லை.மாறாக, மனிதர்களைப் போல், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே பயணிக்கிறது.

சிறிது நேரத்தில் அதே இருக்கையில் படுத்தபடியும் பயணிக்கிறது. அந்த நாய் தினந்தோறும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ஏறி பயணிப்பதாக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ தினந்தோறும் பேருந்தில் ஏறிப் பயணிக்கும் நாய் குறித்த காணொளியை லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.