திண்டுக்கல் மாவட்டம் கொழிஞ்சிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் கவுசல்யா மற்றும் அங்காள ஈஸ்வரி.
இவர்கள் இருவரும் பரிட்சை ஒன்றில் தமிழ் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழ் ஆசிரியர் மாணவிகளை வன்மையாக திட்டியதுடன், கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவிகள் இருவரும் வகுப்புக்குள்ளேயே நீண்ட நேரம் உட்கார்ந்து அழுதனர். அதன் பின்னர், காட்டுப்பகுதிக்குச் சென்று அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.
இதனால் சாலையோரத்தில் கவுசல்யா மற்றும் அங்காள ஈஸ்வரி இருவரும் மயங்கி கிடந்துள்ளனர்.
குறித்த மாணவிகள் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் அவர்களை தேடியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்ததை மாணவிகள் இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி நிர்வாகம் பள்ளிலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.







