கலைஞரின் கருப்பு கண்ணாடிக்குள் ஒளிந்திருக்கும் 47 வருட ரகசியம்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் கருப்பு கண்ணாடிக்குள் 47 வருட ரகசியம் ஒளிந்திருக்கிறது.

திமுக தலைவராக 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கருணாநிதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராகி வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் கருப்பு கண்ணாடிக்குப் பிறகு இருக்கும் அந்த மர்ம ரகசியம் பற்றி இப்போது பார்ப்போம்…

கடந்த 1971-ம் ஆண்டிருலிருந்து திமுக தலைவர் மு.கருணாநிதி கருப்பு நிற கண்ணாடியை பயன்படுத்தி வருகிறார். காரணம் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டது தான். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையான ஜான் ஹிப்கின்ஸ் என்ற மருத்துவமனையில் அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு முதன் முதலாக அவரை கண்ணாடி அணியச் செய்தனர்.

அன்று தொடங்கிய பழக்கத்தை46 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றி விட்டார். கருப்பு கண்ணாடி கூடுதலான எடை கொண்டதால் அவரது கண்ணில் அழுத்தம்உண்டு செய்துவலியை எற்படுத்துகிறது எனக் கூறி அந்த கண்ணாடியை மாற்றிவிட்டு பின் வேறு கண்ணாடி அணிய தொடங்கினார்.