அஜித் என்ற பெயர் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர் மூச்சாக இருக்கிறது. அவரோ எனக்காக எதையும் செய்ய வேண்டாம் உங்களது குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றபடி இருக்கிறார்.
அவரது நடிப்பில் அடுத்து விசுவாசம் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் தல பொங்கலாக கொண்டாட ஆவலாக இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் ரமேஷ் திலக் விசுவாசம் படம் குறித்தும், அஜித் குறித்தும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர், விசுவாசம் படம் பொங்கலுக்கு வரும் போது தெரியும் படம் எப்படி இருக்கப்போகிறது என்று. அவருடன் மங்காத்தா தான் எனது முதல் படம், வேதாளம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பேன்.
ஆனால் விசுவாசம் படத்தில் அவருடன் கொஞ்ச நேரம் வருவேன் என்றார். பின் படப்பிடிப்பில் ஒரு 20 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யாருக்கும் கதை தெரியாது, அஜித்திற்காக மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டோம் என்பார்கள். தல அவர்களுக்காகவே விசுவாசம் படம் என்றார்.