கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் மீது விதித்துள்ள புதிய விதிமுறைகள்

கூகுள் நிறுவனமானது கூகுள் பிளே ஸ்டோர் விதிமுறைகளை மீண்டும் மாற்றியமைத்துள்ளது. அந்தவகையில் கூகுள் பிளே ஸ்டோரில் குழந்தைகள் சார்ந்த செயலிகளில்(app) வன்முறை மற்றும் ஆபாசம் சார்ந்தவற்றை அனுமதிக்கப்படமாட்டாது எனக் கூறியுள்ளது.


இத்துடன் வன்முறையை, மற்றும் ஆபாசங்களை தூண்டுவது மற்றும், மற்றவர்களின் நிறம், தோற்றம் அல்லது இதர அம்சங்களை வைத்து தீங்கு விளைவிக்கும் வகையிலான தரவுகளை கொண்ட செயலிகளை(app) அனுமதிக்க முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைனர்கேட், க்ரிப்டோ மைனர் மற்றும் நியோமைனர் என போன்று பல்வேறு மைனிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து க்ரிப்டோ மைனிங் எக்ஸ்டென்ஷன்களை கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்சமயம் வெடிபொருள் விற்பனை, ஆயுதங்கள் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் செயலிகளை கூகுள் நிறுவனம் தடை செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு மாதிரியான பயனர் அனுபவம் மற்றும் ஒரே அம்சங்களை வழங்கும் செயலிகள் மற்றும் ஆட்டோமேட்டெட் டூல் மூலம் உருவாக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்படுகிறது