சூரியன், பூமி, சந்திரன் ‌ஒரே நேர் கோட்டில்..

எண்ணற்ற அதிசயங்களை தாங்கி நிற்கும் வான்வெளியில் இன்று அரிய காட்சியாக, சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திர கிரகணம் 21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணமாக நிகழவுள்ளது.

வானில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிசயமானவை. அப்படி ஒரு அதிசயம் நிகழப் போகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணத்தை காண பலர் ஆர்வமுடன் உள்ளனர்.

சூரியன், பூமி, சந்திரன் ‌ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.

பொதுவாக சந்திர கிரகணம் சில மணித்துளிக‌ள் நீடித்து பின் படிபடியாக விலகி விடும். ஆனால் ‌இன்றைய சந்திரகிரகணம் தான் மொத்தம் 103 நிமிடங்கள் அதாவது 1மணி நேரம் 43நிமிடங்கள் வரை நீடிக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதால் இந்த அதிசயத்தைக் காண பலர் ஆர்வமோடு காத்திருக்கின்றனர்.