தாயாரின் இரண்டாம் ஆண்டுத் திவசத்திற்கு வந்த மகன் தவறுதலாகத் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்ததில்
உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் வாழும் பிரதீபன் (வயது 31) என்பவரே நேற்றயதினம் தனது தாயாரின் இரண்டாம் ஆண்டு திவச நாளிற்கு முல்லைத்தீவிலிருந்து மீசாலை மடத்தடியில் உள்ள தனது சகோதரன் வீட்டிற்கு வந்திருந்தார் எனவும் மதியம் 2.00 மணியளவில் வாழை இலை வெட்டச் சென்ற வேளை தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தலையில் பலமாக அடிபட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அவரை உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.