11 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த மகளை பெற்றோர்கள் சந்தித்த தருணம்! கண்கலங்க வைக்கும் சம்பவம்

2007 ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற பூஜா என்ற சிறுமி தொலைந்து போய் பின் 11 ஆண்டுகள் கழித்து தன் பெற்றோர்களை தேடி கண்டிபிடித்து சேர்ந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

ஹாரியானாவை சேர்ந்த பூஜா என்ற சிறுமி 2007ம் ஆண்டு பள்ளிக்கு சென்று திரும்பும் போது தொலைந்து போய் உள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் தேடியுள்ளனர் ஆனால் பூஜா கிடைக்கவில்லை.

இந்நிலையில் இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வந்துள்ளார். அப்போது அவர் பொலிசாரிடம் பெற்றோர்கள் மற்றும் அவர் வீட்டின் அடையாளம் குறித்தும் நியாபகம் இருந்த சில குறிப்புகளை கூறியுள்ளார்.

இதனைவைத்து அந்த சப் இண்ஸ்பெக்டர் அவரது பெற்றோர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பூஜாவை 11 ஆண்டுகள் கழித்து சேர்த்து வைத்துள்ளார்.இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.