சீனாவில் தனக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள கணவனின் ஆடிகாரை பெண் அடித்து நொறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கணவனும் அவருடைய கள்ளக்காதலியும் பயணம் செய்துகொண்டிருக்கும் போது ஆடி காரின் பானட்டில் அமர்ந்து பெண் சுத்தியலால் கண்ணாடியை நொறுக்கினார். தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற கணவன் ஒரு கட்டத்தில் காரை நிறுத்தியே தீரவேண்டிய நிலையில் மனைவியின் கையால் சரமாரியாக அடி வாங்கும் நிலையும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கார் கதவைத் திறந்த மனைவி அதுவரை எதுவுமே நடவாதது போல காருக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தக் காட்சிகள் அப்பகுதியைக் கடந்து சென்றவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.







