கமலிடமே கலாட்டா… சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ)

பிக்பாஸின் கடந்த சீஸனில் முழுமையாகவும் சரி, இந்த சீஸனில் இதுவரையும் சரி, இப்படி நடந்ததேயில்லை. வீட்டுக்குள் எத்தனை அடித்துக் கொண்டாலும் சனி, ஞாயிறுகளில் கமல் முன்னால் பள்ளிப்பிள்ளைகள் போல் அமர்வதுதான் போட்டியாளர்களின் வழக்கம்.

(சண்டையா?! அது எங்கேயாவது தூத்துக்குடியிலோ.. திருநெல்வேலியிலோதான் இருக்கும்!). ஆனால் இன்றைய தினம் நேர்மாறாக தாறுமாறுடன் அமைந்தது. ஒவ்வொருவருமே உணர்ச்சிப்பிழம்பமாக இருந்தார்கள். ‘உள்ள வராத.. இது ரத்த பூமி’ என்பதை கலவரம் செய்து  நிரூபித்தார்கள்.

‘நான் கேக்கறேன்.. பஞ்சாயத்தாடா..இது.. பஞ்சாயத்தே இல்ல.. மரியாதை இல்லாத இடத்துல எனக்கும் வேலையும் இல்ல” என்கிற தேவர் மகன் ‘சிவாஜி’ மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கமல் கிளம்பி விடுமளவுக்கு இன்றைய தினம் ரணகளமாக இருந்தது.

ஆனால் ஒன்று, ஒவ்வொருவரின் உணர்ச்சியிலும் எத்தனை உண்மை இருந்தது பாருங்கள்! நடிப்பிற்கும் அசலுக்கும் இதுதான் வித்தியாசம். இந்த துல்லியமான உணர்ச்சிகளை அவர்களால் படப்பிடிப்பில் தரவே முடியாது.

kamalsss_11541 கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) kamalsss 11541

இந்தப் பஞ்சாயத்தில் பேசப்பட்ட சர்ச்சைகளைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

‘ஒருவரின் ஆளுமையை தீர்மானிப்பதில், உருவாக்குவதில் அவர் படித்த கல்விக்கூடம் முக்கிய பங்கை வகிக்கிறது’ என்கிற உண்மையை பொன்னம்பலத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

அவருடைய முரட்டு முகத்தின் பின்னால் இருந்த, நாம் அறியாதிருந்த பின்னணியை அறிந்து கொள்ள முடிந்தது. ‘அப்பா..இல்ல.. அம்மா வரல.. நானேதான் போய் ஏவிஎம் செட்டியார் பள்ளிக்கூடத்துல போய் சேர்ந்தேன்’ என்று பொன்னம்பலம் சொன்னது உருக்கமானது.

(‘எதிர்க்க இருந்த பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன்’ என்றார் கமல் டைமிங்காக).  வணிக நோக்கமின்றி கல்விக்கூடங்கள் அமைவது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆதாரமான சமூக விஷயம் என்று கமல் ஆதங்கப்பட்டதும் கலங்கியதும் உண்மையானது.

பொன்னம்பலத்திடம் இரண்டு பிரச்னைகள் இருப்பதாகப் படுகிறது. ஒன்று, தலைமுறை இடைவெளி. இளையவர்கள் அடிக்கும் லூட்டிகளை பெரியவர்களால் சகித்துக் கொள்ளாமல் எரிச்சல் அடைவது.

எனவேதான் ‘டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா’ ஆகியோரின் கூத்தும் கும்மாளமும் இவரை எரிச்சல் அடைய வைக்கின்றன. இன்னொன்று, தமிழ்நாடு, கலாசாரம், பண்பாடு என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி அற்ப விஷயங்களை ஊதிப்பெருக்குவது.

இதுவும் தலைமுறை இடைவெளியின் இன்னொரு வடிவமே. இதில் ஆணாதிக்க உணர்வும் கலந்துள்ளது. “பொம்பளைங்க பொம்பளைங்களா இருக்கணும்” என்பது போன்ற திரைப்பட வசனங்களின் நடைமுறை பாத்திரங்கள் இவர்கள்.

pons_badll_11027 கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) pons badll 11027

தன்னருகே அமர்ந்திருந்த ஐஸ்வர்யா, தன் மேல் படும்படியாக கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தார் என்பது இவர் முன்வைக்கும் பிரச்னைகளுள் ஒன்று.  ‘தன் உடை காரணமாகவும் மிக முக்கியமாக காலில் அடிபட்டிருந்தாலும் அப்படி உட்கார நேர்ந்த காரணத்தை ஐஸ்வர்யா விளக்கியும் பொன்னம்பலத்தால் ஏற்க முடியவில்லை.

கமல் சுட்டிக் காட்டியது போல் இதில் கலாசார பிரச்னையும் கலந்தே உள்ளது. கால்மேல் கால் போட்டு அமர்வது மேலை நாடுகளில் இயல்பான பழக்கம். ஆனால் இங்கு அது அவமரியாதையாக பார்க்கப்படுகிறது.

ஒரு பழைய சம்பவம். கமல்ஹாசனின் ரசிகர்கள் கூட்டத்தில், கமலின் வேண்டுகோளுக்கிணங்க எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். தன் இயல்புக்கேற்ப ஜெயகாந்தன் மேடையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த போது, ரசிகக் குஞ்சுகளில் ஒருவர் கோபப்பட்டு ‘என் தலைவன் முன்னாடியா கால் போட்டு உட்கார்ந்திருக்க? காலை கீழே போடு’ என்று கத்த, கமல் இதில் உடனே தலையிட்டு கூச்சல் போட்ட ரசிகரை அழைத்து கோபித்து ஜெயகாந்தனிடம் மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது.

இன்னொன்று, ஒரு படப்பிடிப்பில் மூத்த முன்னணி நடிகர் ஒருவர் உள்ளே நுழையும் போது, அனைவரும் மரியாதை கலந்த பக்தியுடன் எழுந்து நிற்க, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நடிகை சிலக் ஸ்மிதா, அப்படியே அமர்ந்திருந்தாராம்.

“ஏங்க இப்படி பண்ணீட்டீங்க?” என்று பிறகு ஒருவர் விசாரிக்கும் போது “நான் அணிந்திருந்த கவர்ச்சியான உடை விவகாரமாக இருந்தது. கால் மீது கால் போட்டு மறைத்துக் கொண்டிருந்தேன்’ என்று அவருடைய நோக்கில் சொல்லப்பட்ட காரணத்திலுள்ள நியாயம்  புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

baby_cry_11256 கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா!: (பிக்பாஸ் சீசன் 2 : 34ம் நாள்!!- வீடியோ) baby cry 11256

இளம் வயதுகளில் நாமும் அப்படித்தானே ஜாலியாக இருந்தோம்” என்கிற நோக்கில் இளம் தலைமுறையினரின் மனவோட்டங்களைப் புரிந்து கொண்டு முதிர்ச்சியாக நடக்கும் பொறுப்பும் பெருந்தன்மையும் பெரியவர்களுக்கு வேண்டும்.

இளையவர்களிடம் நிதானமாக அவர்களின் பிரச்னைகளைச் சுட்டிக் காட்டினால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். பலருக்கு இந்தப் பொறுமையும் முதிர்ச்சியும் இருப்பதில்லை.

இதன் மறுமுனையில், பெரியவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்ப்பதில் இளையவர்களின் பங்கும் இருக்கிறது. இதற்காக தங்களின் தனித்தன்மைகளில் இருந்து, இயல்புகளிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டியதில்லை. “இது என் நேச்சர்” என்று ஐஸ்வர்யா பொங்குதவற்கும் இதுதான் காரணம்.

இப்படி பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதில்தான் ‘குடும்பம்’ என்கிற நிறுவனத்தின் அழகும் பெருமையும் இருக்கிறது. ஆனால் ‘பிக்பாஸ்’ வீடு செயற்கையாக உருவாக்கப்பட்ட, தற்காலிகமான வீடு என்பதால் ‘இவர் தங்களின் குடும்ப உறுப்பினர்’ என்கிற எண்ணம் அவர்களுக்குள் படியவில்லை.

அப்படி உடனே படிந்து விடும் என்று எதிர்பார்க்கவும் முடியாதுதான். ஆனால் – இவை சார்ந்த சகிப்புத்தன்மையோடு இந்த விளையாட்டை விளையாடுவதுதான் இதிலுள்ள அடிப்படை சவாலே. இது பலருக்குப் புரியவில்லை. தங்களின் செளகரிய எல்லைகளில் இருந்து இறங்கி வரும் சகிப்புத்தன்மை இங்கு பலருக்கு இல்லை.

தமிழ்நாடு, கலாசாரம் என்று தொடர்ந்து பேசும் பொன்னம்பலம் அதற்கு முன்னுதாரணமாகவும் இல்லை. பெண்கள் குறித்து கொச்சையாக பேசுவது, இளையவர்களின் பிழைகளை கோபத்துடன் சுட்டிக்காட்டுவது, இது குறித்து தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டும் புறம்பேசிக் கொண்டும் இருப்பது’ என்று எதிர்மறையான விஷயங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுவா தமிழ் கலாசாரம்? ‘வந்தாரை வாழ வைப்பதும்’ தமிழ் கலாசாரம்தான்’ என்பதை ‘பொன்னம்பலம்’ போன்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

SOURCE 1

PART 1

PART 2