60 வயது மந்திரவாதி 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியானா மாநிலத்தில் 60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஃபேதாஹாபாத் மாவட்டம் , தோஹானா நகரை சேர்ந்தவர் பாபா அமர்புரி என்கிற பில்லு. மந்திரவாதியான இவர் தன்னை நம்பி வரும் பெண்களிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி அவர்களை தனி அறைக்கு அழைத்து செல்வார்.

அங்கு அவர்களுக்கு மயக்க பானம் கொடுத்து பலாத்காரம் செய்துவிடுவார். அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுவார். இதனால் அச்சம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் தனது இச்சையை தீர்த்து கொள்வார்.

இதுபோல் அவர் 120 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பில்லுவின் உறவினர் ஒருவர் பெண்களை வீடியோ எடுத்த காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்தார்.

5 நாட்கள் இதை ஆராய்ந்த போலீஸார் பில்லுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பில்லுவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

arrest012-1532150812  60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. arrest012 1532150812

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்டது குறித்து அவர் கூறுகையில் போலீஸ்காரர்களுக்கு நான் லஞ்சம் கொடுக்காததால் என்னை இதுபோல் சிக்க வைத்து வீண் பழி போட்டு திட்டமிட்டு கைது செய்துள்ளனர் என்றார்.

குர்மீத் இதுபோல் ஹரியானா மாநிலத்தில் தேரா சச்சா இயக்கத்தை சேர்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் தனது ஆசிரமத்தில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக்கில் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.