ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்

ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வெற்றி படமாக சந்திரமுகி அமைந்தது. பி.வாசு இயக்கியிருந்த இப்படம் மலையாளத்தில் 1993ல் வெளியான Manichitrathazhu படத்தின் தழுவலாகும்.

இப்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் போன்றோரும் நடித்திருந்தனர். இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பேசப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்ரனை தான் தேர்வு செய்தார்களாம். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லையாம்.

இதனாலயே தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனை தேர்வு செய்துள்ளனர். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.