தனுஷ் வேகமாக சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவருக்கென ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது.
துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகராக உருவாகி திருடா திருடி படம் மூலம் பலரின் மனங்களில் இடம் பெற்றார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், தற்போது இயக்குனர் என பயணித்து வருகிறார்.
அவரின் படங்களில் ஏதாவது ஒரு குத்து பாடல் செம் ட்ரண்டாகிவிடும். இதில் மாரி படத்தில் வந்த தர லோக்கல் பாடலும் ஒன்று. இப்படம் இதே நாளில் கடந்த 2015 ல் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாவைத்தது.
இன்று 3 வருடம் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடிவருகிறார். அதிலும் அனிருத்தின் இசை படத்திற்கு பெருமை. இந்நிலையில் மாரி 2 விரைவில் வரவுள்ளது.






