சர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு – வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் ஒரு கெட்அப் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது.

யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்கார் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.