சாதனை மேல் சாதனை படைக்கும் டோனி: வாழ்த்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி 34 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் தொடரில் 10,000 ஓட்டங்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 322 ஓட்டங்களை இந்திய அணி எட்ட முடியாமல் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்து பரிதாபமாக தோல்வியடைந்தது.

இப்போட்டியில் 43-வது ஓவரின் போது டோனி 34 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் போட்டியில், அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 4-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்தவர்களில் டோனி 12-வது இடம் பிடித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது ஜோஸ் பட்லரை கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் அரங்கில் 300-வது கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட்(417), மார்க் பவுச்சர் (403), குமார் சங்ககரா(402) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் டோனி நான்காவதாக இணைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டி20 தொடரின்போது ஒரே போட்டியில் ஐந்து கேட்ச் பிடித்து சாதனை படைத்தார்.

இப்படி இங்கிலாந்து சென்றுள்ள டோனி, அங்கு விளையாடி வரும் தொடர்களில் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறார்.

10,000 ஓட்டங்களை தொட்ட டோனிக்கு இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககாரா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவ்த்துள்ளார்.