40 ஆண்டுகளுக்குமுன் திருடிய சாக்லேட்டுக்கு பணம் கொடுத்த நேர்மையான திருடன்

பிரித்தானியாவின் லிவர்பூலிலுள்ள Belle Vale Shopping Centreக்கு ஒரு அநாமதேய கடிதம் வந்தது.

அதில் “அன்புள்ள ஐயா, 1975ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது உங்கள் ஷாப்பிங் செண்டரிலுள்ள Woolworthsஇலிருந்து இரண்டு சாக்லேட்டுகளைத் திருடிச் சென்று விட்டேன், அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பணத்தையும் இத்துடன் அனுப்பியுள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்துடன் ஐந்து பவுண்டு நோட்டு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

Woolworths தற்போது ஷாப்பிங் செண்டராக இல்லாததால் அந்த பணம் நன்கொடையாக கொடுக்கப்பட உள்ளது.

இது குறித்து கூறிய செய்தி தொடர்பாளர் ஒருவர், இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நல்ல விடயத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அந்த கடிதத்தை அனுப்பியவருக்கு Belle Vale Shopping Centre தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது மன்னிப்புக் கோரலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.