அமெரிக்க பெண்ணின் அனல் பறக்கும் காணொளி… வாயடைத்துப் போகும் இளைஞர்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

கலிபோர்னியான மாகாணம் சான்டியாகோ நகரைச் சேர்ந்த டெமி பேக்பி ((Demi Bagbi)) என்ற பெண் டிரட்மில் இயந்திரத்தில் அசுரவேகத்தில் ஓடுகிறார்.

அடுத்த நொடியே ஸ்குவாட் ஜம்ப் செய்கிறார். அதனை முடித்த உடன் உடற்பயிற்சிக்கென உள்ள பிரத்யேக பந்து மூலம் தண்டால் செய்கிறார்.

சான்டியாகோவின் வலிமையான பெண் என அழைக்கப்படும் டெமி, ஏற்கனவே பல வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.