ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், குழந்தையை அடித்துத் துன்புறுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அந்தப் பெண், மிளகாய்ப் பொடியை குழந்தையின் வாயில் அள்ளித் திணித்ததால் குழந்தை வலியால் துடிக்கத் தொடங்கியது. இதைப் பார்த்து ஓடிவந்த கிராம மக்கள் விசாரித்தபோது, அங்கன்வாடியில் நடந்த சம்பவம் தெரிய வந்தது.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், அந்தப் பெண்ணை பணியிடை நீக்கம் செய்யவும், அங்கன்வாடி பொறுப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.







