சளிப்பிரச்சனையை தீர்க்க!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்று பூண்டு, பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் உணர்வோம். அதோடு பூண்டில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பல வகையான சல்ஃபர் கலவைகள் இருக்கிறது.

பூண்டில் இருந்து வரும் மிகவும் அடர்தியான நாற்றத்திற்கு இதுவே காரணம். இதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் அல்சீனல் நம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது. அதோடு இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது.

என்னென்ன இருக்கிறது? :
உடலில் ஏற்படும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது பூண்டு.

தினமும் ஏதேனும் ஒரு வகையில் பூண்டினை நாம் சேர்த்துக் கொள்கிறோம். இப்போது குளிர் காலம் என்பதால் ஏற்படக்கூடிய சளிப்பிரச்சனையை பூண்டினைக் கொண்டு எப்படி தீர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி :
பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து இந்த மருந்து தயாரிக்கலாம். இரண்டு இன்ச் அளவுள்ள இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் பின்னர் இரண்டு அல்லது மூன்று பூண்டினை தோல் சீவிக் கொள்ளுங்கள். இவற்றை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

சுமார் ஐந்து நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் சூடு ஆறியதும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறையும், அரை ஸ்பூன் தேனையும் சேர்த்து பருகலாம்.

வெங்காயம் :
சிறிதளவு வெங்காயத்தையும்,பூண்டையும் தனித்தனியாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்தக் கலவையை அரை டம்பளர் தண்ணீரில் சேர்த்து சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
இவை சளியினால் ஏற்படக்கூடிய பிறத்தொல்லைகளுக்கும் தீர்வளிக்கும்.

மஞ்சள் பூண்டு :
தோல் நீக்கி பாதியாக நறுக்கிய பூண்டு ஆறு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,அரைஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் தேன்,ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதில் ஊறிய பூண்டினை எடுத்து அப்படியே சாப்பிடுங்கள். ஒரு முறை தயாரித்ததை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதாக இருந்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

பூண்டு சூப் :
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள், அது பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கக்கூடிய அரைகப் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சைவ உணவு சாப்பிடுபவரக இருந்தால் இதனுடன் ஏதேனும் காய்கறியை சேர்க்கலாம். இதே அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் இத்துடன் சிக்கன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதில் சேர்த்திருக்கும் காய்கறி அல்லது சிக்கன் வெந்ததும் அதனை இறக்கி விடலாம்.

பூண்டு டீ :
ஒரு கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள். அதில் பாதியாக நறுக்கிய ஐந்தாறு பூண்டினை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் அவை கொதித்ததும் இறக்கி விடலாம்.

பின்னர் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அசை ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

வேறு முறைகள் :
இந்த வழிகளில் பூண்டினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், இதைத் தவிர நேரடியாக ஒரு பூண்டை அப்படியே கடித்துச் சாப்பிடலாம். இதனால் நாற்றம் வரும் என்று பயப்படுகிறவர்கள். தேனில் ஊறிய பூண்டினை எடுத்துச் சாப்பிடலாம்.

இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இதனைச் செய்ய வேண்டும். இதைத் தாண்டியும் சளி குறையவில்லையெனில் மருத்துவரை சந்திக்கலாம்.

நன்மை 1 :
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.

நன்மை 2 :
ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும்.

நன்மை 3 :
ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

நன்மை 4 :
பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீழ்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது.

நன்மை 5 :
பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும்.

நன்மை 6 :
இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் அடங்கியுள்ளதால், பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். ஆனால் இது ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்மை 7 :
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது PhIP என்ற ஒரு வகை ஹெட்ரோசைக்ளிக் அமைன் (HCA).

பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு தான் PhIP-யை கார்சினோஜென்ஸாக மாற்றுகிறது.இதனால் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது.