விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!

நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல இருக்கின்றன என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தெரிவித்த கருத்தினை தூக்கிப்பிடித்துக்கொண்டு பலரும் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “தற்போது வடக்கில் இருக்கின்ற நிலவரம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை அங்குள்ளது.
சமூகவிரோத குழுக்களின் செயற்பாடுகள் அதிகளவாக இருப்பதனை காணமுடிகின்றது. தனது கணவரின் முன்னாலேயே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை கூறியுள்ளார். அதற்காக அவரை தூக்கிலிட வேண்டும் என்றா? இவர்கள் சொல்கின்றார்கள்.தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியமானதே. நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன.அந்த விடயங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து விஜயகலா மகேஸ்வரனின் விடயம் குறித்து பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.