விஜய்க்கு அமைச்சர் அறிவுரை.!

தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் போஸ்டரில் புகைபிடிப்பது போல வெளியான போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

பின்னர் சில தினங்களுக்கு முன்னர் தமிழக பொது சுகாதாரத்துறை விஜய் மற்றும் முருகதாசிற்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்குமாறு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இதனையடுத்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது வளையதள பக்கங்களில் இருந்த அந்த போஸ்டரை நீக்கி இருந்தது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் நடிகர்கள் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என விஜய்க்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர். படங்களில் புகைபிடிக்கும் காட்சியிலோ அல்லது மது அருந்தும் காட்சியிலோ நடிக்க மாட்டார். அனைத்து நடிகர்களும் அதை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.