மத்திய வங்கி கொள்ளையின் முக்கிய சூத்திரதாரியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை அழைத்து வருவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் சென்றுள்ளதாக அரசியல் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
நிச்சயம் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை ரணில் அழைத்து வருவார் என்றும் தாம் அரியாத ஒருவருக்கு திறைசேரியை ஒப்படைத்திருக்கமாட்டார் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மிக பெரிய திருடனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு அவரிடம் உண்டு என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
மேலும், அவர் வரும் விமானத்தில் திருடனை அழைத்து வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, திங்கட்கிழமை சிங்கப்பூரில் நடைபெற உள்ள 06வது ´சர்வதேச நகரம்´ மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அந்த நாட்டின் உயர் மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், அரசியல் தரப்புகளிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.