அமெரிக்க தூதுவர் சம்பந்தனுக்கு சொன்ன ரகசிய தகவல்!!

மகிந்தவின் ‘முடிவு’

‘அண்ணன் சொன்னால், களம் இறங்கத் தயார்’ என கோத்தா பல தடவை சொல்லிவிட்டார்.

ஆனால், அண்ணன் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இதுவரையில் சொல்லவில்லை. தம்பியின் பெயரைப் பிரேரிப்பதை அவர் உடனடியாக விரும்பவில்லை என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

தன்னுடைய புதல்வனைக் கொண்டுவருவதுதான் அவருடைய உண்மையான விருப்பமாம். ஆனால், புதல்வனுக்கு 35 ஆக இன்னும் 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், அதற்கிடையில் நிறைவேற்று அதிகாரப் பதவிக்கு வருபவர் ‘பலமான’ ஒருவராக இருப்பதை அவர் விரும்பாட்டார் என்று ஒரு தகவல்.

அதுதான் அவரது தயக்கத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. இந்தப் பின்னணியில், தமது சகோதரர்களை கடந்த வாரம் இராப்போசனம் ஒன்றில் சந்தித்த அவர், பல விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருப்பதாகத் தகவல்.

அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதன்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன.

சகோதரர்களுக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகளைக் களைவதற்குத்தான் இந்த இராப்போசனம் நடத்தப்பட்டதாம்.

gotta அதிரடி அரசியல்: அமெரிக்க தூதுவர்  சம்பந்தனுக்கு சொன்ன ரகசிய தகவல்!! அதிரடி அரசியல்: அமெரிக்க தூதுவர்  சம்பந்தனுக்கு சொன்ன ரகசிய தகவல்!! gottaகோத்தாவுக்குப் பதிலாக..

பதவி விலகிச் செல்லும் வல்லரசின் தூதுவர் முக்கிய தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தார்.

பிரியாவிடைச் சந்திப்பு என்பதாலும், அவரது அண்மைக்கால நகர்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமையாலும், தூதுவரிடம் பல தகவல்களையும் குறிப்பிட்ட அரசியல் தலைவர் கேட்டுள்ளார்.

தூதுவரும் மனம் திறந்து தகவல்களை கசிய விட்டுள்ளார். கோத்தா விவகாரம் குறித்து கேட்டபோது, ”அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறப்பது இலேசானதல்ல.

அதற்கு ஒரு நடைமுறை உள்ளது. தமது பிரஜைகள் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதாவது இருந்தால் அது குறித்து விசாரணைகள் நடத்ப்பட்டுத்தான் பிரஜாவுரிமையை நீக்குதவற்கான நடைமுறை செயற்படுத்தப்படும்” என தூதுவர் சொன்னாராம்.

அப்படியானால் பொது எதிரணி என்ன செய்யும் என தலைவர் கேட்டபோது, தூதுவர் சொன்ன பதில் சற்று ஆச்சரியமாக இருந்தது.

”குடும்பத்துக்கு வெளியிலிருந்து ஒருவரை ஜனாதிபதியாக்கத்தான் முன்னாள் தலைவர் விரும்புவார்.

அவ்வாறு வருபவர் தொடர்ந்தும் பதவியிலிருக்கக்கூடிய ”பலமான” ஒருவராக இருப்பதை அவர் விரும்பமாட்டார்.

தற்போதைய பிரதமருக்குக் கூட அந்த வாய்ப்பை அவர் கொடுத்துவிட்டு, 2020 ஏப்ரலுக்குப் பின்னர் நடைபெறக் கூடிய தேர்தல் மூலம் தான் பிரதமராக வருவதற்கு முற்படலாம்.” இதுதான் தூதுவர் சொன்ன தகவல். அந்த வல்லரசின் கணிப்பு இப்படித்தான் இருக்கின்றது.

இவர்கள் வாக்கு யாருக்கு?

அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சுமார் 500 நாட்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், முக்கிய 3 அணிகளும் அதனை இலக்காக வைத்து நகர்வுகளை ஆரம்பித்துவிட்டன.

சிங்களக் கடும் போக்காளர்களின் வாக்குகளைப் பாதிக்காத வகையில் சிறுபான்மையினரின் வாக்குகளை அறுவடை செய்வதற்குத்தான் 3 தலைவர்களும் முற்பட்டிருக்கின்றார்கள்.

மைத்திரி அணி தமிழ் வாக்குகள் தமக்கு அவசியம் என்பதை உணர்ந்து காய்களை நகர்த்துகின்றது. மட்டு நகரில் மே தினத்தை நடத்தியதுகூட இதற்காகத்தானாம்.

இப்போது பிரதி அமைச்சராக அதுவும் விவசாயத்துக்கு அங்கஜனைப் போட்டதன் மூலம் வடக்கு வாக்குகளை மைத்திரி தரப்பு இலக்கு வைக்கிறது.

சளைக்காமல் அடிக்கடி மைத்திரியும் வடக்குக்குச் செல்கிறார். நாளைய தினமும் திடீர் விஜயமாக அவர் யாழ். செல்கிறார்.

முதலமைச்சருடனான தனது நெருக்கம் தனக்கு பிளஸ் பொயின்ட் என்று அவர் நம்புகின்றார். மைத்திரிக்கு போட்டியாக ரணில் 10 ஆம் திகதி யாழ். செல்கிறார்.

அவரது விஜயத்தின்போது இந்தியத் தூதுவரும் யாழில் நிற்பார் என்பதால், அந்த விஜயம் முக்கியமானதாக அமையப்போகின்றது.

மொட்டு அணியைப் பொறுத்தவரையில் நிர்ணயிக்கும் வாக்குகளாக இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் வாக்குகளை முக்கியமாக கருதுகின்றார்கள்.

வடக்கில் தமக்கு சரியான அமைப்பாளர்கள் இல்லாததுதான் அவர்களுக்குள்ள பிரச்சினை. சுறுசுறுப்பாக செயற்படக்கூடிய அமைப்பாளர்களை அவர்கள் தேடுவதாக

தகவல்.
யாதவன்