வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களில் 25 வீதமானவையே ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும், அங்கு இடம்பெறும் பெரும்பாளான குற்றச்செயல்கள் வெளிஉலகுக்கு தெரியவருவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையில் இந்த தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த நாங்கள் அரும்பாடுபட்டிருந்தோம். எனினும், வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று இந்த அரசாங்கத்தில் இருந்துகொண்டு நாங்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலைக்கு கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கை உருவாக்கிவிட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.






