நாள்தோறும் 8 கோப்பை கோப்பி குடித்தால் இறப்பது தள்ளிப் போகுமாம்… !!

கோப்பி குடித்தால் உடல் நலத்துக்கு நல்லது என்றும், அதிகம் குடித்தால் உடலுக்கு கேடு என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக அளவு கோப்பி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள் இங்கிலாந்தில் ஆய்வு நடத்தினார்கள். அதில் 5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களிடம் 10 வருடங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் அதிக அளவு கோப்பி குடித்தவர்கள் உயிரிழப்பில் இருந்து தப்பித்தனர். அவர்கள் தினசரி 8 கோப்பை வரை கோப்பி குடித்தவர்கள் ஆவர். கோப்பியில் உள்ள ‘காபின்’ என்ற மூலப்பொருள் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கோப்பியில் 1000 இரசாயன பொருள் கலவைகள் உள்ளன. அதில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்’ எனப்படும் உயிர் வெளியேற்ற எதிர்ப்பிகள் கலப் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகின்றனர்.

அதனால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் கூறியுள்ளது.