சீக்கிரமே உடல் எடையை குறைக்க!

முட்டையில் அதிக புரதம், நல்ல கொழுப்பு, ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், விட்டமின் A மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே முட்டையுடன் சில வகை உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது, அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

முட்டை மற்றும் அவகாடோ

அவகாடோவில் நல்ல கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. எனவே அதோடு முட்டை சேர்த்து சாப்பிடும் போது வேகமாக மெட்டபாலிசம் நடைபெறுவதால் உடல் எடையும் குறையும்.

முட்டை மற்றும் எஜகியல் பிரட்

எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், அது அதிக பசியை தூண்டாது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.

முட்டை மற்றும் சிவப்பு மிளகாய்

தினமும் முட்டையுடன் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து சாப்பிட்டால், மெட்டபாலிசம் வேகமாக நடைபெற்று, கொழுப்புகள் குடல்களில் படிவதை தடுக்கிறது.

முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிய அடர்த்தி கொண்ட கொழுப்பு இருப்பதால், அவை இதயத்திற்கு நன்மைகள் அளித்து, கொழுப்பை விரைவில் எரிக்க உதவுகிறது.

முட்டை மற்றும் கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. எனவே முட்டையுடன் கருப்பு பீன்ஸை சேர்த்து சாப்பிடும் போது, அது 3.7% வயிற்றுக் கொழுப்பை குறைக்கிறது.

முட்டை மற்றும் பசலைக்கீரை

பசலைக் கீரையில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. எனவே இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும் போது, அதன் சத்துக்கள் இரட்டிப்பாகுவதுடன், அதிக பசி எடுக்காமல் கட்டுப்படுத்த உதவுகிறது.