தினமும் 8 கப் காபி குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

“காபி” என்ற வார்த்தை உச்சரித்தாலே சோகத்தில் இருந்தாலும், சிலரின் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாகும். அந்த அளவிற்கு காபிக்கு அடிமையாகி இருப்பார்கள்.

அதேசமயம் பல இடங்களில் ஒரு கருத்து நிலவி வருகிறது. அது என்னவென்றால் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் உடல் நலனுக்கு கேடு ஏற்படும் என்ற கூற்று தான்.

இதுதொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் சிலர் இங்கிலாந்து மக்கள் 5 லட்சம் பேரிடம் ஆய்வு ஒன்றினை நடத்தினர்.

10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில், அதிகமாக காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆய்வின்பொழுது ஒரு நாளைக்கு 8 கப் வரை காபி குடித்தவர்கள் உயிரிழப்பிலிருந்து தப்பியுள்ளனர்.

காபியில் உள்ள “காபின்” என்ற மூலப்பொருளானது, ரத்த அழுத்தம் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதாகவே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே அதிக அளவில் காபி குடித்தால் உயிரிழப்பில் இருந்து தப்பித்து நீண்டநாட்கள் உயிர் வாழலாம் என அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.