விஷபாட்டில் ஜனனி ஏன் இப்படி செய்துவிட்டார்?- அடுத்த ஜுலியா?

கடந்த பிக்பாஸ் வீட்டில் சில மோசமான விஷயங்களை செய்து தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. இவர் இப்போது சினிமா துறையில் சில வேலைகள் செய்து வருகிறார்.

பிக்பாஸ் 2 சீசனில் இன்னும் யாரும் அடுத்த ஜுலி இவர் என்று கூற ஆரம்பிக்கவில்லை. அந்நிகழ்ச்சியில் இருக்கும் அனைவரும் மிகவும் தெளிவாக விளையாடிக் கொண்டு வருகிறார்கள். இன்று வந்துள்ள புதிய புரொமோவில் எல்லோரும் ஜனனியை தாக்குகின்றனர்.

புரொமோ கடைசியில் அனந்த் வைத்தியநாதன், ஜனனி உங்களுக்கு எதற்கு விஷ பாட்டில் என்ற பெயர் வந்தது என்பது இப்போது புரிகிறது என்று கூறுகிறார். இதனால் ஜுலியை போல் இவரும் நிகழ்ச்சி ஏதோ மோசமான விஷயத்தை செய்துவிட்டார் என்று தெரிகிறது.