இந்த பாட்டி வைத்தியங்கள் ஆபத்தை ஏற்படுத்த கூடியதாம்!

நமது வீடுகளில் இன்றும் பின்பற்றப்படும் பாட்டி வைத்திய முறைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றிருப்போம். இது பல வேளைகளில் நமக்கு கைவைத்தியமாக பலனளித்தாலும், அனைத்துமே பாதுகாப்பான வழிமுறைகள் என்று சொல்ல முடியாது.

சில கை வைத்திய வழிமுறைகளை நம் வீடுகளில் தவிர்ப்பது நல்லதாகும். அவை என்னென்ன என்று இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வோம்.

மெழுகுவர்த்தி மூலம் காதை சுத்தம் செய்தல்
மெழுகுவர்த்தியின் இரு முனைகளையும் பற்ற வைத்து விட்டு, காதில் உள்ள அழுக்குகளை உறிஞ்சும் முறையை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். எனினும், இதன் மூலம் காதுகள் அடைத்துக் கொள்ளவோ அல்லது தொற்றுகள் ஏற்படவோ அதிக வாய்ப்புகள் உள்ளதால், இது அபாயமான வழிமுறையாகும்.
தீர்வு:
மெழுகுவர்த்தியை எரிப்பதற்குப் பதிலாக காதுகளுக்கான சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம்.

முகப்பருக்களுக்கு டூத் பேஸ்ட்

முகப்பருக்களை குணப்படுத்த டூத் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். எனினும், முகப்பருக்களை எரிச்சல் அல்லது அரிப்பின் மூலம் பெரிதுபடுத்தும் குணத்தை தான் டூத் பேஸ்ட் கொண்டுள்ளது.

தீர்வு:
வினிகர் கரைசல் அல்லது உப்பு நீரை பயன்படுத்தலாம்.

விரல்களின் மருக்களை வெட்டுதல்
கூரான பொருட்களைக் கொண்டு விரல்களிலுள்ள மருக்களை சில பேர் வெட்டி விட முயற்சி செய்வார்கள். இது தொற்றுக்களை வரவழைக்கும் செயலாகவும், அவருடைய விரலையே வெட்ட வேண்டிய சூழலையும் உருவாக்கிவிடும் என்பது தான், இதிலுள்ள ஆபத்தாகும்.
தீர்வு:
அறுவை சிகிச்சையே சிறந்தது.

தீக்காயங்களுக்கு  வெண்ணெய் வைத்தல்
தீக்காயங்கள் ஏற்பட்டால் அதற்கு வெண்ணெய் பூசும் வழக்கம் உள்ளது. எனினும், தீக்காயங்களில் வெண்ணெய் வைப்பதால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தீர்வு:
உங்களுடைய தீக்காயம் சாதாரணமானதாக இருந்தால், அதில் சற்றே குளிர்ந்த நீரை ஊற்றி சரி செய்ய முயற்சிக்கலாம் என்கிறார் டாக்டர். ரத்னம்.

மீன் முள்ளை கையால் எடுத்தல்
தங்களது தொண்டைகளில் மீன் முள் சிக்கிக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது கைகளிலேயே எடுத்து விட முயற்சிப்பது நாம் காணும் சாதாரண செயலாகும். எனினும், இவ்வாறு செய்வதால் அந்த முள் தொண்டையில் நன்றாக சிக்கிக் கொள்ளவோ அல்லது ஆழமாக சென்று மாட்டிக் கொள்ளவோ செய்யும். இதனால் உங்களுடைய தொண்டை சேதமடைவதுடன், விரல்களின் நகங்களும் தொண்டையை சேதப்படுத்தி விடும்.
தீர்வு:
அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுவது தான் பிரச்சனையை முறையாக தீர்க்கும் வழி.

கண்கட்டிகளை ஊசியில் சரிசெய்ய முயற்சித்தல்
கண்களில் கட்டிகள் வரும் பொது ஊசியைக் கொண்டு அந்த கட்டியை குத்தி, சரிசெய்ய முயற்சிப்பதை நாம் பார்த்திருப்போம். எனினும், இந்த கண் கட்டி கண்ணுக்கு மிகவும் அருகில் இருப்பதால், தவறுதலாக கண்களை குத்திவிடும் வாய்ப்பு உள்ளது.
தீர்வு:
ஊசிக்குப் பதிலாக, ஏன்டிசெப்டிக் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகளின் பல் ஈறுகளில் அல்ககோல்
குழந்தையின் பல் ஈறுகளில் வலி ஏற்படுவதை தடுக்க அல்ககோலை பயன்படுத்துவார்கள். எனினும், இதில் உள்ள எரிச்சலூட்டும் குணம் குழந்தைகளை மிகவும் பாதிக்கும். மேலும், சில வகை அல்ககோல்களை குடிப்பதற்கு பயன்படுத்தக் கூடாதாம்.

தீர்வு:
வலியை தாக்குப் பிடிக்கும் வகையில் குழந்தைக்கு எதையாவது கடிப்பதற்கு கொடுப்பது நல்லது.