விஸ்வாசம் படத்தில் லேடி சூப்பர்ஸ்டாரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?விஸ்வாசம் படத்தில் லேடி சூப்பர்ஸ்டாரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் ஆரம்பித்த நிலையில், படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

n 1

அதன்படி விஸ்வாசம் படத்தில் நயன்தாரா வைத்தியராக  நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

n 2

படத்தை பொங்கலுக்கு வெளியிட  படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக படம் தீபாவளிக்கு வெளியிட  இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், சென்னை மற்றும் மும்பையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

n 3

இந்த படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பில் வெள்ளை முடி, தாடியுடனான தோற்றத்தில் நடித்த அஜித், விரைவில் இளமை தோற்றத்திற்கு மாறுவார் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.